New Arrivals/Restock

கப்பலுக்காகப் பெய்த மழை: விகடபாரதி கவிதைகள் (Tamil Edition)

flash sale iconLimited Time Sale
Until the end
04
48
13
Free shipping for purchases over $99 ( Details )
Free cash-on-delivery fees for purchases over $99
Please note that the sales price and tax displayed may differ between online and in-store. Also, the product may be out of stock in-store.
Used  US$90.00
quantity

Product details

Management number 232002508 Release Date 2026/06/18 List Price US$90.00 Model Number 232002508
Category

விகடபாரதியின் கவிதைகள் ஒவ்வொன்றும் புயலின் வரைபடத்தைப் போன்றவை. ஒவ்வொரு கவிதையின் மையமும் மனதைக் கடக்கும் போது உண்டாகும் பேருணர்ச்சியைச் சமாளிப்பது எளிதானதன்று.உலகின் இருவேறு உண்மைகளை ஒரே கவிதையில் போட்டு உடைக்கும் அசாத்தியம் நிறைந்த கவிதை புலப்பாடு விகடபாரதியின் கவிதைகளின் உள்ளாந்த தன்மையாக மிளிரக் கூடியன. இந்த நூற்றாண்டானது மிகவும் நேசிக்கப்பட வேண்டியதாகக் கொண்டாடும் கவிதை வரிகளின் ஊடாகத்தான் விகடபாரதி அச்சமூட்டுவதற்காக மன்னியுங்கள் என்ற எச்சரிக்கையையும் பொதிந்து வைக்கிறார்.சவப்பெட்டிக்குள் இருக்கும் புன்னகையை மண்ணைத் தோண்டி எடுக்காமலும் பெட்டியின் ஆணியைக் கழற்றாமலும் ஊடுருவிப் படம் பிடித்துக் காட்டக் கூடிய நுண்மையைக் கொண்டுள்ள கவிதை வரிகள் விகடபாரதியின் தனித்த நுட்பம் என்று சொல்லலாம். ஒரு கூடை முட்டாள்தனத்தைக் கொட்டி அதனுள் ஒரு சொட்டு ஞானத்தை ஒளித்து வைக்கும் கவிதைகளின் இந்நுட்பத்தோடு பயணிப்பது தனித்த பரவசத்தைத் தரக் கூடியது.“மெளனத்தின் ஆழத்திலிருந்துகிளம்பி வரும் சில சொற்கள்சட்டென நின்று கொள்ளும்நன்மையின் அளவு எவ்வளவென்றுஅவைகளுக்குத் தெரியும்அளவை நீட்டிக்க நன்மைக்குத் தெரியாதுஅளவு நீட்டித்தல் நன்மை ஆகாது”என விகடபாரதி இத்தொகுப்பினுள் படைத்திருக்கும் கவிதை வரிகள் இத்தொகுப்பிற்கும் பொருந்திப் போவதுதான் அவரது எழுத்திற்கும் வாழ்க்கைக்குமான இடைவெளியற்ற தன்மையைக் காட்ட கூடியன எனலாம். இத்தொகுப்பில் ‘புதிய இஸக் கவிதைகள்’ என்றொரு புதிய வகைமையிலான கவிதைகளை அறிமுகப்படுத்துவதுடன் அது போன்ற கவிதைகளை வாசிப்போரையும் எழுதத் தூண்டுகிறார் விகடபாரதி. இத்தொகுப்பின் தனித்த அம்சம் என்று இதைக் குறிப்பிடலாம்.திருடர் மன்னிப்பார் என்று நம்புதல், மலைபெயர் காற்று, பறக்கும் எலும்புகளின் முன்னறிவிப்பு, வெடித்துச் சிதற உத்தரவிடு எசமானே, மறையாத கானக வானக் கடல், பெருநகரத்துப் பெருவனம் என்பன போன்ற தலைப்புகளின் வழியாக விகடபாரதி வரைந்து செல்லும் கவிதைச் சித்திரம் அழிக்க அழிக்க புதுப்புது சித்திரங்களை வரையும் மாயா ஜாலத்தை இத்தொகுப்பை வாசிக்கும் போது உணர முடியும். தொடர்ந்து விகடபாரதியின் கவிதைத் தொகுப்புகளைப் படித்து வருபவர்கள் தவற விடக் கூடாத ஒரு தொகுப்பாக இத்தொகுப்பும் அமைந்துள்ளது என்பதை இத்தொகுப்பை வாசித்த பின் மறுக்க இயலாது. Read more

ASIN B09GBJK2LG
Language Tamil
File size 1.6 MB
Page Flip Enabled
Word Wise Not Enabled
Grade level 5 - 12
Reading age 8 - 18 years
Accessibility Learn more
Screen Reader Supported
Publication date September 14, 2021
Enhanced typesetting Enabled

Correction of product information

If you notice any omissions or errors in the product information on this page, please use the correction request form below.

Correction Request Form

Product Review

You must be logged in to post a review